ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!
ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...! ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம். ஐ.ஐ.டி (IIT - Indian Institute of Technogy): மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. ஜே.இ.இ. மெயின் தேர்வினை எழுதி, அதில் அதிக கட்- ஆப் மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால்தான், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் நுழைய முடியும். பாடப்பிரிவுகள்: பி.டெக்., இளநிலையில் ஏரோஸ்பேஸ், விவசாயம், செராமிக், எனர்ஜி, தாது வளங்கள், நேவல் ஆர்கிடெக்ஷர், ஓஷன் என்ஜினீ யரிங், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், பயோ மெடிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எல...